புதுதில்லி:
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செவ்வா யன்று புதுதில்லியில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வழங்குமாறு மனு அளித்தார்.

தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு கடந்த வாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து, தில்லிசென்ற மின்சாரத்துறை அமைச் சர் தங்கமணி, எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து, தமிழகத்திற்கு நாள் தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன்
நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, ஒடிசாவில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால், நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறிய அவர்,
அடுத்த 3 நாட்களில் தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை அனுப்ப மத்திய அரசு உறுதியளித்து ள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: