கோயம்புத்தூர்,
கோவையில் காவலர் செல்வராஜ் கொலைக்கு பின்னர் நடைபெற்ற கலவரங்களை காவல்துறையினரே, அவர்களில் ஒருவரை கூட பாஜகவினர் காட்டி கொடுக்கவில்லை என பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் மத்திய கயிறு வாரியதலைவரும், பாஜக முன்னாள் மாநில தலைவரும், தற்போதைய தேசிய குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘கோவையில் கடந்த 1997 ஆம் ஆண்டு காவலர் செல்வராஜ் வெட்டி கொல்லப்பட்டார். இதையடுத்து நடந்த அத்தனையும் (கலவரம்) பாஜகவோ, இந்து முன்னணி செய்தது அல்ல. மாறாக, காவல்துறையினரே செய்தது தான். ஆனால், காவல்துறையினரில் ஒருவரைக் கூட பாஜகவினர் காட்டி கொடுக்கவில்லை’ என்று கூறினார். 1997 இல் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பிறகு கோவை மாவட்டம் முழுவதும் பெரும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதுடன், பெரும் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டதுடன், சிறுபான்மையின சமூகத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. மேலும்,

இதைத்தொடர்ந்து சில மாதங்களிலேயே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஏராளமானோர் பலியாகினர். இத்தகைய பின்னணியில் அன்றையதினம் கலவரத்தை நடத்தியது காவலர்கள் தான் என்றும், அவர்களைத் தாங்கள் ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை என்றும் பாஜகவின் தலைவர் பொதுக்கூட்ட மேடையிலேயே வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: