லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோண்டா மாவட்டத்தில் 8 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். திங்களன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் கடத்தியுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாதப் பகுதியில் வைத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அழுகுரல் கேட்டகவே அருகில் உள்ள கிராமவாசிகள் வரவே சிறுமியை விட்டு அந்த மர்மநபர் தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி வயது கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave A Reply

%d bloggers like this: