ஆக்ரா:
இஸ்லாமியரை எரித்துக் கொன்றதற்காகவே, ஒருவருக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச நவநிர்மாண் சேனா என்ற மதவெறி கட்சிதான் இந்த வேலையைச் செய்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகம்மது அப்சல் எனும் வங்காள இஸ்லாமியர் எரித்துக் கொல்லப்பட்டார். அவரை, சம்புலால் ரேகர் என்பவர் அடித்துக் கொன்று உயிரோடு எரித்தார். இது அப்போது வீடியோவாகவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையொட்டி கைதான சம்புலால் ரேகர், தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலக் கட்சியான, உத்தரப்பிரதேச நவநிர்மாண் சேனா என்ற கட்சி, சம்புலால் ரேகரை ஆக்ரா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது.

“நாங்கள் நீண்டநாட்களாகவே சம்புலால் உடன் தொடர்பில் இருந்து வருகிறோம்; எங்கள் கட்சி சார்பில் ஆக்ராவில் இந்து வேட்பாளர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று விரும்பிய நிலையில், அதற்கு சம்புலால் மட்டுமே பொருத்தமானவர் என்று முடிவு செய்துள்ளோம்; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், சம்புலால் சிறையில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்வார்” என்று அந்த கட்சியின் தலைவர் அமித் ஜானி கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.