சேலம்,
8 வழிச்சாலையும் வேண்டாம், 6 வழிச்சாலையும் வேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சேலத்தில் இருந்து சென்னை வரை பசுமை சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க விளை நிலங்கள் அனைத்தையும் கட்டாயமாக கையகப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. தற்போது இத்திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளபோதும், மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்த பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி 8 வழிச்சாலையும் வேண்டாம், 6 வழிச்சாலையும் வேண்டாம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று சேலம் அய்யோத்தியாப்பட்டிணம் பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, துணைத் தலைவர் பி.தங்கவேலு, பூபதி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, ஒன்றிய துணைத் தலைவர் சத்தியா உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.