சேலம்,செப் 17-
பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முதிர்வு தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வலியுறுத்தி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தை முற்றகையிட்டனர். ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றவர்களை காவல் துறஐயினர் கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனே திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப் பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சேலம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையுடன் பிஏசிஎல் நிறுவனம் ஜூலை 2013 வரை செயல்பட்டது. அதன் பின் ஏற்பட்ட பிரச்சினைகளால் உச்சநீதிமன்ற வழக்குக்கு உள்ளாகி தீர்வு கண்டது. அதில்
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்லோதா தலைமையில் கமிட்டி ஒன்றை நிறுவி அதன்மூலம் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று பணமாக்கி முதலீட்டாளர்கள் கூறிய தொகையை 6 மாத காலத்திற்குள் வழங்க 2016 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படவில்லை.

இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள தங்களின் சேமிப்பை இழந்த முதலீட்டாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க பலகட்ட போராட்டங்களை நடத்திவந்தனர். மத்திய அரசு இப்பிரச்சனையில் உரிய நவடிக்கை எடுக்காததை கண்டித்து சேலம் ரயில் நிலையத்தை சிஐடியு மாநில துணைத்தலைவர் டி.உதயகுமார் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல் துறையினர் ரயில் நிலையத்தின் முகப்பில் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். பின் அங்குn முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, சிஐடியு மாநில குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி உள்ளிட்டு பிஏசிஎல் நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் பேசினர். இதில் பிஏசிஎல் சினியர்கள் ராஜமாணிக்கம், விஸ்வநாதன், உள்ளிட்டு சங்க செயலாளர் கே.சிவானந்தம், உள்ளிட்டு ஐநூற்றுக்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: