திருவள்ளூர்,
பழவேற்காட்டில் முகத்துவாரத்தை தூர்வாரக் கோரிஅனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று (செப்.17) 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமே மீன்பிடித்தொழில் தான். இந்நிலையில் கடலையும், ஏரியையும் இணைக்கும் முகத்துவாரம் கடந்த 8ஆண்டுகளாக தூர்வாராததால் முகத்துவாரம் முழுமையாக மணல் திட்டுகளாக மாறியுள்ளது. இதனால் படகுகள் கடலுக்குள் செல்ல முடியாததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகத்துவாரத்தை தூர் வரவேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடற்கரை ஓர கூட்டமைப்பு, ஏரி மீன்பிடி தொழில் செய்யும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு மற்றும் ஆந்திர மீனவர் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று (செப்.17) ஒரு நாள் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடைபெற்ற முகத்துவாரப் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று கூடி முகத்துவாரம் தூர்வார வேண்டும், ஏரியை ஆழப்படுத்த வேண்டும், தூண்டில் வளைவு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.