தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளையொட்டி தொண்ணூறு வயதைக் கடந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முற்போக்காளர்களுக்கும் பாராட்டு, விருது வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் திங்களன்று (செப்.17) நடைபெற்றது. கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அறிமுக உரையாற்றினார்.

இதில் பேராசிரியர் க.அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்ட 25 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சங்கரய்யா முதுமை காரணமாக நிகழ்ச்சிக்கு நேரில் வரஇயலாத நிலையில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். ‘‘ஏன் அவர் பெரியார்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக பெரியார் சிலைக்கு ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.