நேற்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நேரத்தில் ஆயுதமேந்திய சங் குண்டர்கள் ஜேன்யூ வளாகத்திற்குள் வந்திறங்கினர். இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏபிவிபிக்கு வாக்களிக்காத மாணவர்களைத் தாக்கத்துவங்கினர். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடது சாரி அணியைச் சேர்ந்த சாய் பாலாஜியும் தாக்கப்பட்டுள்ளார். புகார் கொடுக்க அருகிலுள்ள வசந்த்குஞ் காவல்நிலையத்திற்கு அவர் சென்றபோது போலீசார் அவரைப் பிடித்து வைத்துக் கொண்டனர்.பல்கலைக் கழக மாணவர்களும் சில ஆசிரியர்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். காவல் நிலையத்திற்கு வெளியிலும் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான ஏபிவிபி குண்டர்கள் வெறிக்கூச்சல்லிட்டுத் திரிகின்றனர்.

நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பிருக்கிறது.

ஆங்கில ஊடகங்கள் மவுனம் காக்கின்றன.

-Vijayasankar Ramachandran

Leave a Reply

You must be logged in to post a comment.