கால்நடைகளை கட்டி வைத்து மேய்க்கும் காலம் ஆரம்பித்த பின் விவசாயி முதலில் நட ஆரம்பித்த பசுந்தீவனம் இந்த தீவனப்புல். இந்த தீவனப்புல்லில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.

தீவனப்புல் என்பது நேப்பியர் புல் மற்றும் கம்பு பயிரை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. இதில் பல ரகங்கள் உண்டு. அதாவது கோ -1,2,3,4,5 என்ற பல ரகங்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ரகங்கள்.ஏபிபிஎன்-12 ஆந்திர மாநிலத்தில் வெளியிடப்பட்ட ரகம். இது APBN- 12 சிகப்பு நிற தண்டு உடைய ரகம். இதன் இலைகள் கரும்பச்சை நிறம். இலைகள் மீது முட்கள் இருக்காது.ஆடு, மாடுகள் இந்த தீவனப்புல்லை விரும்பி உண்ணும். தண்டுகளை கூட மிச்சம் வைக்காமல் தின்று விடும். கட்டரில் வைத்து வெட்டி போட தேவை இல்லை.நிலத்தில் இருந்து அப்படியே அறுத்து போடலாம்.

‘தீவனப்புல் நடவு செய்யும்போது இரண்டு அடி வரிசைக்கு வரிசை இடைவெளி இருக்குமாறு நட வேண்டும். கரும்பு நடவு செய்வது போல் வரிசையாக நடவு செய்ய வேண்டும்.
தீவனப்புல் கரணை முளைத்த உடனே ஒரு களை எடுத்து மண் அணைக்க வேண்டும். மண் தன்மைக்கு ஏற்ப நீர் பாசனம் செய்யவேண்டும். இயற்கை உரமான அமிர்தகரைசல் கொடுக்கலாம். தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு அறுவடை செய்யலாம்.கறவை மாடுகளுக்கு நாள் ஒன்று பதினைந்து கிலோ பசுந்தீவனம் தேவை. ஒரு மாட்டிற்கு குறைந்தது 20 (இருபது) சென்ட் அளவில் பசுந்தீவனம் நடவு செய்ய வேண்டும்.பசுந்தீவனங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் கறவை மாடுகள் ஊட்டமுடன் வளர வழி வகுக்கும். இந்த தீவன(கரணை) புல்லை தொடர்ந்து கால்நடை களுக்கு அளிப்பதன் மூலம் அவை அதிகம் பால் கறக்கும். அவற்றின் சினை பிடிக்கும் சுழற்சி ஊக்குவிக்கப்படும். இந்த கரணைப்புல் அதிகம் கொடுப்பது மூலம் பால் கறக்கும் மாடுகளுக்கு அடர்தீவன தேவைகுறையும்.

Leave a Reply

You must be logged in to post a comment.