ரேவரி:
ஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. சிபிஎஸ்இ தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக பிரதமர் மோடியிடம் விருதும் பெற்றவர்.இவரைக் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி, 10 கொண்ட கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது. நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவத்தில், ஹரியானா மாநில பாஜக அரசு வழக்குப் பதிவு செய்வதற்குக் கூட மறுத்து விட்டது. குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது.

இதனால், ஆவேசடைந்த மாணவியின் தாயார், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினாரே… இப்படி புகார் மனுவைக் கூட வாங்க மறுப்பதுதான், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் லட்சணமா?” என்று சாடினார்.

இதையடுத்து, பங்கஞ் என்ற ராணுவ வீரர் மற்றும் நிஷூ, மணீஷ் உட்பட 3 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்ட காவல்துறை, தற்போது நிஷூவை மட்டும் கைது செய்துள்ளது. மேலும், ஹரியானா மாநில அரசு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நிதியுதவியும் அறிவித்தது.                                                           கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்                                                      இந்த நிதியுதவியை அளிப்பதற்காக, ஹரியானா மாநில அரசு அதிகாரிகள், மாணவியின் தாயாரை நேரில் சந்தித்தபோது, அந்த நிதியை அவர் வாங்க மறுத்துள்ளார். “எனக்கு தேவை நிதி அல்ல; நீதிதான்” என்று மீண்டும் ஆவேசப்பட்டு, காசோலையை வாங்காமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.