நாமக்கல்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய மாநாடு சங்கத்தின் ஒன்றியதலைவர் ஆறுமுகம் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ரவி, மாவட்ட செயலாளர் இ.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் எலந்தக்குட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த வங்கி, ஆய்வகவசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திட வேண்டும். கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். வெப்படை பேருந்து நிறுத்தத்தில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றிய தலைவராக எம்.செந்தில்குமார், செயலாளராக எம்.மணிகண்டன், பொருளாளராக எம்.கௌசல்யா, துணை தலைவராக செங்கோட்டுவேல், துணைச் செயலாளராக டி.கோகுல்பாரதி உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.