மன்னார்குடி,
பயணிகள் பிரிவில் நவீனமய மற்றும் தரம் உயர்த்தும் நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல் உட்பட நாடு முழு வதும் 400 நிலையங்களை தேர்வு செய்து படிப்படியாக ரயில்வே குத்தகைக்கு விட்டு வருகிறது. சரக்கு பிரிவிலும் இதே நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் விரிவுபடுத்த இருக்கிறது. இது அமல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான குட்செட் சுமைத் தொழிலாளர்கள், உள்ளூர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் நாடு முழுவதும் வேலையிழப்பார்கள்.

இதுபற்றி டிஆர்இயு உதவி பொதுச்செயலாளர் டி.மனோகரன் கூறியிருப்ப தாவது:- நாடு முழுவதும் முற்கட்டமாக 286 குட்செட்டுகளை ரயில்வே தேர்வு செய்து உள்ளது. இதில் ஆர்வம் உள்ள மற்றும் முனையப் போக்குவரத்தில் அனுபவம் மிக்க தனியார் நிறுவனங்கள் விருப்பப் படிவங்களை வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க கோரி ரயில்வே வாரிய இணையதளம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு குறையாத திட்டங்கள் தர வேண்டும். வர்த்தக நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும். ரயில்வேயின் அசையா சொத்துக்கள் ரயில்வே வசமே இருக்கும். இதில் ஈடுபடும்முனைய இயக்குநர்கள் ரயில்வே வர்த்தக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் போன்ற விவரங்கள் இடம் பெற்று உள்ளன. குட்செட் இடங்களை குத்தகைக்கு தர மறுக்கும் குறிப்புகள் அதில் இடம்பெற வில்லை. திருச்சி, தஞ்சை, சேலம் மார்க்கெட், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், அரக்கோ ணம், முண்டியம்பாக்கம், காட்பாடி, கொருக்குப்பேட்டை, மேல்பாக்கம், கூடல்நகர், மானாமதுரை, மீளவிட்டான், திருநெல்வேலி, திண்டுக்கல் என தமிழகப் பகுதியில் 16 மற்றும் கேரளப் பகுதியில் 4 என மொத்தம் 20 தெற்கு ரயில்வே குட்செட்டுகள் நவீனமயமாக தரம் உயர்த்த குட்செட் முனைய இயக்குநர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

பெரும் போக்குவரத்து நிறுவனங்கள் இதில் களத்தில் இறங்கும். இதனால் செலவு இல்லாமல் குட்செட்டுகளை கூடுதல் வசதிகளுடன் பராமரிக்க இயலும். மேலும் அந்த நிறுவனங்கள் தங்கள் வருவாயை பெருக்க, கூடுத லாக சரக்குகளை ரயில்வேக்கு பிடித்துக் கொடுக்கும் ஏஜென்சிகளாக செயல் படுவார்கள் என ரயில்வே எதிர்பார்க்கிறது. ரயிலில் சரக்குகள் ஏற்றி இறக்க பயன்படும் லாரிகள், ட்ரக்குகள் லோடுமேன் பணி போன்றவை குட்செட் முனைய இயக்குநர்கள் வசம் செல்லும். இதற்கான கட்டணம் அவர்களே நிர்ணயிப்பார்கள். இதில் ஈடுபட இருக்கும் பெரிய நிறு வனங்கள் சரக்குகள் ஏற்றி, இறக்க அதிநவீன கருவிகள், தங்கள் சொந்த வாகனங் கள் பயன்படுத்தவார்கள். இதனால் சரக்கு கையாளும் கட்டணம் உயரும். ரயில்வே குட்செட் குமாஸ்தாக்கள், போர்டர்கள் வேலை இழப்பார்கள். நவீன மயம் என்ற பெயரில் குட்செட் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை ரயில்வே கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.