ராஜஸ்தான் :

நாடு முழுவதும் பெட்ரோல்,டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இன்று பெட்ரோல் விலை 30காசுகள் உயர்ந்து 85.15 ரூபாய்க்கும், டீசல் விலை 30காசுகள் உயர்ந்து 77.94 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துவருவதால் நாடு முழுவதும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மேலும் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பாஜக கூட்டணியில் உள்ள அமைச்சர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சமூக நீதிக்கான மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே நான் மத்திய அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை. தற்போது நான் அமைச்சராக இல்லை என்றால் இவ்விலை உயர்வு என்னை பாதிக்கலாம் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.