புதுதில்லி,
இந்திய தேசத்தின் அரசியல் எந்தப்பாதை யில் செல்ல வேண்டும் என்பதற்கு மீண்டும் ஒருமுறை வழிகாட்டியிருக்கிறார்கள் தில்லி ஜவஹர் லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள்.

கடந்த வெள்ளியன்று மாணவர் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 6 ஆண்டுகளில் முதன்முறையாக அதிகபட்சமாக 67.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ), அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம்(ஏஐஎஸ்எப்), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (டிஎஸ்எப்) ஆகிய இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூட்டணி அமைத்து போட்டி யிட்டன. எதிர்த்து ஏபிவிபி, காங்கிரஸ் அமைப்பான என்எஸ்யுஐ மற்றும் பீர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் போட்டி யிட்டன.

வாக்கு எண்ணிக்கையில்  ஏபிவிபி வன்முறை:
இந்நிலையில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதல் சுற்றிலேயே இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடது மாணவர் கூட்டணி வெற்றிப் பாதையை நோக்கிமுன்னிலை வகிக்கத்துவங்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் வெளியிலிருந்து குண்டர்களை குவிக்கத்துவங்கினர். நேரம் செல்லச்செல்ல, இடது மாணவர் கூட்டணி உறுதியாக வெற்றிபெறும் என்ற நிலை ஏற்பட்ட போது, ஏபிவிபி குண்டர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். வாக்குப்
பெட்டிகளை அடித்து நொறுக்கியும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் களை அச்சுறுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கிளைவெளியிட்ட கண்டன அறிக்கையில், “வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த கட்டிடத்தில் ஏபிவிபி குண்டர்கள் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடது மாணவர் கூட்டணியின் தலைவர்களை குறி வைத்து அவர்கள் தாக்கத் துவங்கினர். படுதோல்வி உறுதி என்பதால் ஆத்திரமடைந்த நிலையில், அங்கிருந்த மாணவிகள் உட்பட அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கத்துவங்கினர்.

தகவல் அறிந்து பல்கலைக்கழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் அணிதிரண்டு வந்து பெரும் முழக்கம் எழுப்பி கடும் எதிர்ப்பை காட்டிய பிறகு, வேறு வழியின்றி ஏபிவிபி குண்டர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வன்முறையை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தோல்வி உறுதி என்றால் மதவெறி பிடித்த ஏபிவிபி அமைப்பினர் வன்முறையின் எந்த உச்சத்திற்கும் செல்வார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு போதும் அதை அனு மதிக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இடது கூட்டணி மகத்தான வெற்றி:
ஏபிவிபி வன்முறையைத் தொடர்ந்து பல் கலைக்கழக நிர்வாகம் வாக்கு எண்ணிக்கையை 15 மணி நேரத்திற்கு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் ஞாயிறன்று காலை மீண்டும் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் பதிவான 5,185 வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, இடது மாணவர் கூட்டணி மகத்தான வெற்றிபெற்ற விபரம் வெளியிடப்பட்டது. வெளியான முடிவுகளின்படி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை பொதுச்செயலாளர் பதவிக்கு இந்திய மாணவர் சங்கத்தின்வேட்பாளர் அயஜாஸ் அகமது ரத்தார், 2423 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏபிவிபியின் கணேஷ் குர்ஜாரை 1300 வாக்குகளில் தோற்கடித்தார். மாணவர் பேரவை தலைவராக ஏஐஎஸ்ஏ வேட்பாளர் சாய் பாலாஜி, 2161 வாக்குகள் பெற்றுவெற்றிபெற்றார். இவர் ஏபிவிபி வேட்பாளர் லலித்பாண்டேயை 1179 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். துணைத் தலைவர் பதவிக்கு டி.எஸ்எப் அமைப்பின் வேட்பாளராக போட்டி யிட்ட சரிகா சவுத்ரி 2692 வாக்குகள் பெற்று வென்றார். இவர் ஏபிவிபி வேட்பாளர் கீதா ஸ்ரீ பருவாவை 1680 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இணைச் செயலாளர் பதவிக்கு ஏஐஎஸ்எப் வேட்பாளர் அமுதா ஜெயதீப் போட்டியிட்டு 2047 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர் ஏபிவிபி வேட்பாளர் வெங்கட்டை 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இடது மாணவர் கூட்டணியின் மகத்தான வெற்றியை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வெற்றிபெற்ற இடது மாணவர் வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும், இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செய லாளர் விக்ரம் சிங் உள்ளிட்டோரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

பிடிஐ, எஸ்எப்ஐ ஜேஎன்யு டுவிட்டர்

Leave a Reply

You must be logged in to post a comment.