ரஷ்யாவின் மிகப்பெரிய போர் ஒத்திகையில் சீன வீரர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வு அமெரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகளை அதிச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ரஷ்யாவின் டிசுகுல் என்ற பகுதியில் நடந்து வந்தது. 5 நாட்களாக நடைபெற்ற இந்த ஒத்திகையில் 3 லட்சம் ரஷ்யா வீரர்கள் பங்கேற்றனர். 1000 அதிதொழில்நுட்ப , விமானங்கள், 36,000 போர் டேங்குகள், 10,000 போர் வாகனங்கள் என்று மிகப்பெரிய போர் படைகள் எல்லாம் இதில் கலந்து கொண்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்த ஒத்திகையின் போது சீனா ராணுவத்தை சேர்ந்த ஒரு லட்சம் வீரர்கள் மற்றும் வாகங்கள், போர் விமானங்கள் பங்கேற்றிருக்கிறது.
உலகில் இதுவரை நடைபெற்றிருக்கும் போர் ஒத்திகைகளில் இதுதான் மிகப்பெரிய போர் ஒத்திகை என்று கூறப்படுகிறது. சிரியாவை குறி வைத்து அமெரிக்கா பல்வறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்நிலையில் ரஷ்யா மிகப்பெரிய போர் ஒத்திகையை சீன வீரர்களையும் இணைத்து செய்திருப்பது உலகளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.