ரத்லாம்;
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரியை, திடீரென அவரை முந்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. திறந்து வைத்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருக்கிறார். இங்கு, உஜ்ஜைனி அருகிலுள்ள ரத்லாம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகள் கொண்ட, இந்த மருத்துவக் கல்லூரியை செப்டம்பர் 12-ஆம் தேதி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ரத்லாம் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான காந்திலால் பூரியா, ஒருநாள் முன்னதாகவே இந்த கல்லூரியைத் திறந்து வைத்து, பாஜக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தனது ஆதரவாளர்கள் மற்றும் புரோகிதருடன் கல்லூரிக்கு வந்து, ஆற அமர பூஜைகளை நடத்தி அவர் கல்லூரியைத் திறந்து வைத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நல்ல நாளாக இருந்ததால், கல்லூரியைத் திறந்து வைத்ததாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் மருத்துவக் கல்லூரிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கல்லூரியைத் திறந்து வைக்கும் உரிமை தனக்கே உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளனர்.ஆனால், இதையறியாத முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஏற்கெனவே திறக்கப்பட்ட கல்லூரியை புதன்கிழமையன்று மீண்டும் வைத்து திறந்து வைத்து ஏமாந்துள்ளார்.
தற்போது கல்லூரியைத் திறந்து வைத்ததற்காக காங்கிரஸ் எம்.பி. உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.