ஆத்தூர் :

முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் ஆத்தூர்  நகராட்சி அலுவலகம் முன் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி முல்லைவாடி பகுதிக்கு காவிரி நீர் வழங்காமல் வழங்கியதாக முறைகேடாக கட்டணம் வசூலிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், 3, 4, 5, 7 ஆகிய வார்டுகளுக்கு வாரம் இரண்டு முறை குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்தி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிளை செயலாளர் பி.கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தாலுகா செயலாளர் எம்.முர்கேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் இல.கலைமணி, முல்லைவாடி பகுதியை சேர்ந்த எம்.கணேசன், மருதமுத்து, செங்கமலை, சேகர், வதராஜி, பாலு ஆகியோர் உள்பட ஊர் பொதுமக்கள் எண்ணற்றோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: