சண்டிகர் :

இந்தாண்டு சிபிஎஸ்சி பாடத்தில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற அரியானா மாணவியை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை என மாணவியின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரியானாவில் இந்தாண்டு நடந்த சிபிஎஸ்சி பாடத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் பாராட்டப்பட்டு பரிசளிக்கப்பட்டார். நேற்று அந்த மாணவி மகேந்தரகார்க் பகுதியில் பயிற்சி வகுப்பு ஒன்றிற்கு செல்லும்போது, வழிமறித்த இருவர் போதை மருந்து கலக்கப்பட்ட தண்ணீரை அம்மாணவிக்கு அளித்துள்ளனர். இதையடுத்து மயக்கமடைந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், கனினா பேருந்து நிலையத்தில் மாணவி கடத்தப்பட்ட பின்னர் மாணவியின் பெற்றோருக்கு குற்றவாளிகள் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மாணவி அளித்த தகவலை கொண்டு பங்கஜ், மணீஷ் மற்றும் நிஷு ஆகிய மூன்று பேரின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சம்பவம் நடந்து 16 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. குற்றவாளிகள் தைரியமாக உலா வருகிறார்கள். குற்றம் செய்த கும்பல் கொலை மிரட்டல் செய்கிறது. மாநில அரசும், காவல்துறையும் கண்டு எங்களை கொள்ளவில்லை. ”பேடி பச்சோ பேடி பாத்தோ” என்ற பெண்களுக்கு கல்வியும் பாதுகாப்பும் அளிப்போம் என்ற பிரதமரின் வார்த்தை எங்கே போனது? பிரதமர் மோடி எங்கே? ஏன் அவர் எங்களை பார்க்கவில்லை? என வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் தாயார் வேதனையுடன் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரை போலீசார் வாங்க மறுத்துள்ளனர். பல போலீஸ் நிலையங்களுக்குச்  சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க அங்கு மறுத்த பின் அவர் நேரடியாக காவல்துறை உயரதிகாரியிடம் நேரடியாக புகார் அளித்தாக கூறி உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.