பத்தனம்திட்டா
சபரிமலை அறிவிப்பு
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பம்பை ஆற்றில் 30 அடிக்கும் மேலே வெள்ளம் பாய்ந்தது. எனவே யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. வெள்ளத்துக்குப் பிறகு தற்போது ‘சபரிமலை ஐயப்பன் கோவில்,செப். 16 ஆம் தேதி முதல் செப்.21 ஆம் தேதி வரை திறக்கப்படும்’ என்று தேவஸ்தான போர்டு நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

மும்பை
ரூ.11.528 கோடி அபேஸ்!
பெருநகரங்களில், வங்கி வாடிக்கையாளருக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை பொதுத்துறை வங்கிகளில் ரூ.5,000 ஆகவும், தனியார் வங்கிகளில் ரூ. 10,000 ஆகவும் உயர்த் தப்பட்டது. இந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் 21 பொதுத் துறை வங்கி, 3 தனியார் வங்கிகளில் வைப்புத்தொகை குறை வாக இருக்கிறது என்று அபராதமாக ரூ.11, 528 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை
டி.ஆர்.பாலுவுக்கு பொறுப்பு
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு தி.மு.கவின் புதிய தலைவராக ஸ்டாலினும் பொரு ளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துரைமுருகன் வகித்து வந்த முதன்மைச்செயலாளர் பதவி காலியானதை தொடர்ந்து தற்போது அந்தப் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ரியாத்                                                                                                                           
விமானிகளாகும் சவூதி பெண்கள்                                                                                                                                        சவூதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த ஃப்ளைநஸ் என்ற ஏர்லைன் நிறுவனமானது, முதல் முறையாகப் துணை விமானி மற்றும் விமான சேவையாளர்கள் பணிக்கு பெண்களை நியமனம் செய்வதற்காக அண்மையில் விளம்பர அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் பணிக்காக ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் விமான போக்குவரத்துத்துறையில் சவூதி பெண்கள் கால்பதிக்க உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.