திருப்பூர்,
அண்மையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து வியாழனன்று அவிநாசி ராவுத்தம்பாளையத்தில் உள்ள  தருண் அய்யாசாமி இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று அவரைச் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முத்துசாமி, ச.நந்தகோபால் மற்றும் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தருண் அய்யாசாமியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: