கிஸ்துவார் :

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டத்தின் தண்டரன் பகுதியில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையின் அருகே இருந்த செனாப் ஆற்றின் 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிஸ்துவார் மாவட்ட துணை காவல் ஆணையர் அங்ரேஷ் சிங் ராணா கூறுகையில், ” பலத்த காயம் உடைய 8 பேரை ஜம்மு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 5ரூபாய் பணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் பணமும் அளிக்கப்பட உள்ளது.” என்றார். இது கிஸ்துவார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடக்கும் 3வது பெரும் விபத்தாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.