அகமதாபாத் :

படிதார் இட ஒதுக்கீட்டுக்காகவும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் போராடி வந்த ஹர்திக் படேல் 19 நாட்களுக்கு பிறகு போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

கடந்த ஆகஸ்ட்25 முதல் படிதார் இட ஒதுக்கீட்டுக்காகவும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் அகமதாபாத்தின் வைஸ்நோதேவி சர்க்கிளிலுள்ள தனது வீட்டில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், ஹர்திக் படேல் 19 நாட்களுக்கு பிறகு மற்ற படிதார் சமூக அமைப்பைச் சார்ந்த தலைவர்களான கோதல்தாம் மற்றும் உமியாதாம் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

முதலில் போராட்டத்தை கைவிட மறுத்ததாகவும், அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ள தேவையை மற்ற தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து உண்ணாநிலையை முடித்துக்கொண்டதாகவும் ஹர்திக்கின் உதவியாளர் பனரா கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.