தீக்கதிர்

முதல்தர டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் மில்லர் ஓய்வு….!

ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க தேசிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும்  டேவிட் மில்லர் சர்வதேச போட்டிகள் இல்லாத நேரங்களில் முதல் தர போட்டிகளில் களமிறங்குவது வழக்கம்.

இந்நிலையில்.அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை (50 ஓவர்) கருத்தில் கொண்டு முதல்தர டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறப்போவதாக டேவிட் மில்லர் அறிவித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டிலிருந்து முதல்தர போட்டிகளில் விளையாடி வரும் டேவிட் மில்லர் டெஸ்ட் போட்டிகளில் 3342 ரன்களையும்,ஒருநாள் போட்டிகளில் 2588 ரன்களையும்,டி-20 போட்டிகளில் 1084 ரன்களையும் குவித்துள்ளார்.டேவிட் மில்லர் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள்,டி-20 போட்டிகளில் தான் சிறப்பாகச் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.