லக்னோ :

சக்கரை நோய்க்கு அதிகப்படியான கரும்பு விளைச்சலே காரணம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதியனாத் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவிலேயே அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் ஆகும். மேலும், உத்தரப்பிரதேசத்தில் கரும்பு தொழிற்சாலைகளின் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிலுவைத்தொகையால் அம்மாநில விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இதனாலேயே அம்மாநில பாஜக அரசு இடைத்தேர்தல்கள் அனைத்திலும் தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், லக்னோவின் பாக்பத் பகுதியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் யோகி ஆதியனாத் பேசும்போது, விவசாயிகள் கரும்பை மட்டுமே விளைவிப்பதுதான் சக்கரை நோய்க்கு காரணம் என கூறியுள்ளார். விவசாயத்திற்கும், மக்களின் உணவுப்பழக்கத்திற்கும் பல வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன என்பதை உணராமல் கரும்பிற்கு பதிலாக காய்கறி போன்ற மற்ற பயிர்களை விளைவிப்பதால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: