திருவனந்தபுரம்:
கன்னியாஸ்திரியை வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக, பேராயர் பிராங்கோவிற்கு, கேரள காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பாதிரியார்கள் 5 பேர் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முல்லக்கல் மீது வல்லுறவு குற்றச்சாட்டு எழுப்பினார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக, சக கன்னியாஸ்திரிகள் போராட்டத்திலும் இறங்கினர். மேலும், பேராயர் பிராங்கோ முல்லக்கல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவிடம் புகார் அளித்தார்.
ஆனால், தேவாலயத்தையும், சபையையும் அழிக்கும் திட்டமாக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் இயேசு சபை உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புக்கள் குற்றம் சாட்டின.

இதனிடையே, உரிய சாட்சியங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் இ.பி. ஜெயராஜன் தெரிவித்திருந்தார்.அதன்தொடர்ச்சியாக தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராயர் பிராங்கோ முல்லக்கல் செப்டம்பர் 19-ஆம் தேதி விசாரணைக்கு சேரில் ஆஜராகுமாறு கேரள காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.