புதுதில்லி;
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், பாதிக்கப்பட்டோரை நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.வேலையிடங்கள், சிகிச்சை பெறுமிடங்கள் என எந்த இடத்திலும் எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவது குற்றம் என்பதால், பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதே புதிய சட்டமாகும்.இந்நிலையில், இப்புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.