பிஜ்நோர் :

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிஜ்நோர் மாவட்டத்தில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் மீத்தேன் காஸ் சிலிண்டர் வெடித்ததில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் 6 பேர் பலியாகினர்.

பிஜ்நோர் மாவட்டத்தில் இயங்கி வரும் மோஹித் பெட்ரோ கெமிக்கல் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் மீத்தேன் சிலிண்டர் வெடித்ததில் அங்கு வேலை செய்து வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவத்தை அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். மேலும், இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். தொழிற்சாலையில் கடந்த சில தினங்களாக சிலிண்டரிலிருந்து மீத்தேன் வாயு கசிந்து வந்துள்ளது. சிலிண்டரின் ஓட்டையை அடைக்க அவர்கள் முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.