ஜெய்ப்பூர்;
ராஜஸ்தானில் வெறும் 5 பியூன் வேலைக்கு 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்த அவலம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக இருக்கிறார். இங்கு கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தல் நடைப்பெற்றபோது, புதிதாக 15 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம் என்று கூறித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், 5 ஆண்டுகள் முடியும் நிலையிலும், சில ஆயிரம் பேருக்குக் கூட வேலை வழங்கப்படவில்லை. ராஜஸ்தானில் வேலையில்லாக் கொடுமை முன்பைவிட மிகப்பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது.

அண்மையில், ராஜஸ்தான் மாநிலத் தலைமைச் செயலகத்தில் 18 பியூன் வேலைக்கான அறிவிப்பு வெளியானது. 10-ஆம் வகுப்பு தகுதியிலான இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் 13 ஆயிரம் பேர். அவர்களில் 129 பேர் பொறியியல் பட்டதாரிகள், 23 பேர் வழக்கறிஞர்கள், ஆடிட்டர் ஒருவர், முதுகலைப் பட்டதாரிகள் 393 பேர்.அதன்தொடர்ச்சியாக, தற்போது அதே தலைமைச் செயலகத்தில் வெறும் 5 பியூன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.