கொல்கத்தா:
பெட்ரோல் – டீசல் விலை உயர்வை காரணம்காட்டி, வேலை நிறுத்தம் என்ற பெயரில் பொருளாதாரம் மற்றும் மனித சக்திகள் விரயம் ஆவதை ஏற்க முடியாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் ‘ஒரு பொருளாதாரப் பேரழிவு மற்றும் தவறான நிர்வாகம்’ நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; ஆனால் அதற்காக மேற்கு வங்கத்தில் வேலை நிறுத்தத்தை அனுமதிக்க முடியாது.மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, ஒருநாள் வேலை நிறுத்தத்தை, 80 லட்சம் மனித சக்தி விரயமாகக்கூடிய ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்; எனவே, எந்தவகையான கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் என்றாலும் அதை ஆதரிக்கமுடியாது.

காங்கிரஸ் தலைவர் அகமது படேல், எங்களுக்கும் வெள்ளியன்றே போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பெட்ரோல் உயர்வுப் பிரச்சனையை எதிர்ப்பது என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்; ஆனால் நாங்கள் பந்த்தில் பங்கேற்க மாட்டோம் என்று அவரிடம் நான் சொல்லிவிட்டேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, பலமுறை பந்த் போராட்டத்தை நடத்திய ‘நியாயஸ்தர்’தான் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.