தீக்கதிர்

வங்கி கடனை ஏப்பமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பிரதமர்: ரகுராம் ராஜன்

வங்கி வராக்கடன் பற்றி நாடாளுமன்ற மதிப்பீட்டு குழுவிற்கு ரிசர்வ் வங்கியின்
முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் ஒரு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். “மிக
அதிகமாக வராக்கடன் வைத்திருப்போரின் பட்டியலை பிரதம மந்திரி அலுவலகத்திற்கு 
அனுப்பி, அவர்களில் ஒருவர் இருவரையாவது சட்டத்தின் பிடியில் கொண்டுவர
வேண்டும், அதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும்
என்றேன். ஆனால் இது விஷயத்தில் மேற்கொண்டு நடந்ததை நான் அறியேன்”
என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விபரத்தை தந்துள்ள தி வயர் ஏடு
“இந்தியாவின் மிகப் பெரிய வராக்கடன் பேர்வழிகள் பூஷண் ஸ்டீல் ரூ44478 கோடி,
ரூயா சகோதரர்களின் எஸ்ஸார் ஸ்டீல் ரூ 37284 கோடி” என்றும் குறிப்பிட்டுள்ளது.
வராக் கடனை வசூலிக்க தனது அரசுதான் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக
மோடி முழங்குகிறார். ஆனால் பல்லாயிர்ம் கோடி ரூபாய் பணத்தை விழுங்கி
ஏப்பமிட்டுள்ள பெருமுதலாளிகள் மீது அவர் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
எனும் உண்மை வெளியாகி அவரின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.