திருப்பூர்,
பின்னலாடைகளில் பயன்படுத்தப்படும் எலாஸ்டிக்கின் மூலப்பொருளான இயற்கை ரப்பர் விலை கிலோவுக்கு ரூ.25 வரை கடுமையாக உயர்ந்திருப்பதால் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இயற்கை ரப்பர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும் ரப்பர் விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியரூபாய் மதிப்பு குறைந்தது ஆகிய காரணங்களால் பாலியெஸ்டர் மற்றும் நைலான் நூல் விலையும் கிலோவுக்கு ரூ.35 வரை உயர்ந்துள்ளது. எலாஸ்டிக் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான ரப்பர் மற்றும்நூல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதுடன், தட்டுப்பாடும் நிலவுகிறது.இத்துறையைச் சேர்ந்தவர்கள் பின்னலாடைத் தொழிலின் பிற ஜாப் ஒர்க் நிறுவனங்களைப் போல செயல்படுவதில்லை. குறிப்பாக முன்பணம் மற்றும்தொகையை கொடுத்துதான் மூலப்பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் எலாஸ்டிக் தயாரித்து நிறுவனங்களுக்குக் கொடுத்தால், அதற்கான பணத்தைப் பெற நீண்ட நாள் தாமதம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எலாஸ்டிக் விலை உயர்வு செய்வது கட்டாயமாகி இருக்கிறது.எனவே, பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடனின் காலஅளவை குறைத்துக் கொள்ளவும், மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தொழில் துறையினர் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதன்கிழமை (செப்.12) ஒரு நாள் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவது என திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.