கோவை,
அரசின் திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், கரவளி மாதப்பூர்-கணியூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கலாமணி என்பவரின் விவசாய நிலத்தை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் அளவீடு செய்து கையகப்படுத்த முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று கோவைமாவட்ட ஆட்சியரிடம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்சார்பில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவில், விவசாய நிலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதேபோல், கருர்-கோவை ஆறு வழிச்சாலை திட்டத்திற்காக மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ரயில்வே மேம்பாலம் பயனற்றது. மேலும், அரசின் திட்டங்களுக்கு விவசாய நிலத்திற்கு பதிலாக தரிசு நிலத்தை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் திட்டமிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: