விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ள அன்பின் நகரம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கிராம மக்களும் இணைந்து ஏழு ஆண்டுகள் நடத்திய நீண்ட போராட்டத்தின் பலனாக அரசு துவக்கப்பள்ளி துவங்குவதற்கு, அரசு நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. தங்களது கிராமத்தின் குழந்தைகளுக்காக அரசுப் பள்ளி கொண்டுவர உறுதியோடு போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்பின் நகரம் கிராம மக்கள் பாராட்டுவிழா நடத்தி மகிழ்ந்தனர். விழாவிற்கு வந்த கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்களை கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று அழைத்துச் சென்ற காட்சி.

Leave A Reply

%d bloggers like this: