கோவை,
மகாகவி பாரதியின் 97 ஆவது நினைவு நாளையொட்டி செவ்வாயன்று கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை இடையர்பாளையத்தில் உள்ள காந்தியடிகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமுஎகச இடையர்பாளையம் கிளை செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இங்குள்ள பாரதியாரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கிராமிய பாடகர் தமிழ்வாணன் பாரதியாரின் எழுச்சி பாடல்களை பாடியும், தமுஎகச நிர்வாகிகள் மகாகவி பாரதியின் எழுச்சிமிகு கவிதைகள் குறித்து உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன், மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் உமாமகேஷ்வரி மற்றும் அருள்மணி, சுரேஷ்குமார், சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.