ஜெய்ப்பூர்;
மேடி ஆட்சியில், பெட்ரோல் – டீசல் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் புழுங்கிக் கொண்டிருக்க, மோடிக்கு எதிராக பலர் போராட்டக் களத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தேவஸ்தான துறை அமைச்சரான ராஜ்குமார் ரின்வா, “பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்” என்று மக்களுக்கு இலவச ஆலோசனை வழங்கியுள்ளார்.

“பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால்தான், அவற்றின் விலை உயர்கிறது. இது, பொதுமக்களுக்கு புரியவில்லை” என்றும், “பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைச் சமாளிக்க, தங்களது வீட்டுச் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்” என்றும் பொதுமக்கள் மீதே பழியைத் தூக்கிப் போட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: