சென்னை,
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அதிமுக அரசுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. விடுதலை செய்யும் விவகாரத்தில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்திக்கொண்டே போவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெட்ரோல்-டீசல் மீதான விலையை குறைக்க தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் போதிய நிதி இல்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தந்தால் விலையை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.