சேலம்,
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக மோடி அரசு நாள்தோறும் உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல் விலைகளால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, லாரி, ரிக் தொழில்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன்படி சேலம் மாவட்டத்தில் மட்டும் 600 ரிக் உரிமையாளர்களும், அதனை நம்பி வாழ்வாதாரத்தை நகர்த்தி வரும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்திட வேண்டும். மேலும், ரிக் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரியால் லாரி மற்றும் ரிக் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை முழுவதும் நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சங்கத்தின் தலைவர் சண்முகம், செயலாளர் சேது, பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய அரசிற்கு எதிராக கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.