புதுக்கோட்டை:
தமிழக திரைப்பட வரலாற்றின் தொடக்கக் காலத்தில் முத்திரை பதித்த பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பாவின் நினைவாக அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

செய்தி மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை சார்பில் 198-ஆவது பொருட்காட்சியை புதுக்கோட்டையில் தொடங்கி வைத்த அவர் மேலும் பேசியது: இப்பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறும். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 50 சதவிகிதம் கட்டணச் சலுவை வழங்கப்படும்.

தமிழ்ச் சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பாவின் நினைவாக அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
விழாவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் சு.கணேஷ், வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.