மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்கிறது. துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடை பெறும் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணி செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது.அணி வீரர்கள் விபரம்:
டிம் பெயின் (கேப்டன்),ஆஷ்டன் அகர், பிரண்டன் டொக்கெட், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், ஜான் ஹோலந்து,உஸ்மான் கவாஜா,மார்னஸ் லபுஸ்சான், நாதன் லயன்,மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மைக்கேல் நசெர், மேத்யூ ரென்ஷா, பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க்.

மேக்ஸ்வெல், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஜோ பேர்ன்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.பார்ம் பிரச்சனையால் ஓரம் கட்டப்பட்ட அனுபவ வீரர் பீட்டர் சிடில் நீண்ட காலத்திற்கு பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.