தீக்கதிர்

பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுனர் பலி – 14 குழந்தைகள் படுகாயம்

விழுப்புரம்:
விழுப்புரத்தில் பள்ளி வாகனம் ஒன்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். மேலும் பள்ளி குழந்தைகள் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பரிபாவதி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிமலையில் இருந்து கருமந்துரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை வெங்கடேசன் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில் மொட்டைனூர் கிராமம் அருகே பள்ளி வேன் சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் முன் பக்கம் இருந்த அச்சு முறிந்து அருகில் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பள்ளி மாணவர்கள் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.