தீக்கதிர்

தேசிய பளுதூக்குதல் : தமிழக அணிக்கு 2 வெண்கலம்…!

ராய்ப்பூர்:
43-வது தேசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தமிழ்நாட்டிலிருந்து 22 பேர் கலந்து கொண்டனர்.ஆடவர் 93 கிலோ பிரிவில் தமிழக வீரர் நந்தகுமார் (சென்னை) மொத்தம் 690 கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.மகளிர் 47 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை நந்தினி (சேலம்) 237.5 கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.