ஹைதராபாத் :

தெலுங்கானா மாநில அரசுப்பேருந்து ஒன்று மலைப்பாதையில் செல்லும் போது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகினர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தெலுங்கானா மாநிலத்தின் ஜக்தையால் மாவட்டத்தில் அம்மாநில அரசுப்பேருந்து ஒன்று 62 பயணிகளுடன் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. பேருந்து கொண்டகட்டு என்ற இடத்தில் குறுகிய பாதையில் திரும்பும்போது நிலைதடுமாறி அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 45 பேர் பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் அருகிலிருக்கும் மருத்துவமனைகளில் சேர்த்து வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், ஜக்தையால் மாவட்ட ஆட்சியர் சரத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிந்து சர்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: