தஞ்சாவூர்:
தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ சுரேஷ் தலைமையில் விவசாயி
கள் கருத்து கேட்பு கூட்டம் செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு நடப்பதாக
அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை, பூதலூர், செங்கிப்பட்டி, திரு
வையாறு, ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய பகுதி விவசாயிகள் காலை 10 மணிக்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ஆர்டிஓ சுரேஷ் அலுவலகத்தில் இல்லை. இதை
யடுத்து விவசாயிகள் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் அறையில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:
ஜீவக்குமார்: 1 டிஎம்சி தண்ணீரை 7 ஆயிரம் ஏக்கருக்கு பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழக அரசு 100 டிஎம்சி தண்ணீரை வீணாக கடலில் கலக்கச் செய்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டத்தில் முதல் மடை, நடுமடை, கடைமடை என்று எந்த
மடைக்கு தண்ணீர் இல்லை. முக்கொம்பு அணை உடைப்பை சீர் செய்வதாக கூறி டெல்டா மாவட்டத்தை பாலைவனம் ஆக்கி விட்டது தமிழக அரசு. கர்நாடக அரசு, தமிழக விவசாயிகளை முதுகில் குத்துகிறது. தமிழக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டது.

சுகுமாறன்: மாவட்டத்தில் 19 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.ஆனால் இதுநாள் வரை நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறக்கவில்லை.19 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு என்பது போதுமானது இல்லை. 252 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் போதுமான அளவிற்கு சாக்கு இருக்க வேண்டும். பணம் போதுமான அளவிற்கு இருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் தனியார் வசம் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் 60 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ஒன்றை ரூ.300க்கும் குறைவாக விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றார்.

வீர.ராஜேந்திரன்: கோ 50 விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகளை வைத்து விவ
சாயக் கடன் பெறுபவர்களுக்கு உரம் எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர். இதை கைவிட வேண்டும்.

ராஜேந்திரன்: தமிழக அரசின் விவசாய மின் இணைப்பு பெறும் தக்கல்
முறையில் உடனே மின் இணைப்பு பெற எனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தியுள்ளேன். ஆனால் இதுநாள் வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.

கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கரும்பு பணம்
கொடுக்கவில்லை. 2017-18 ம் ஆண்டிற்கு கொடுத்த பணம் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்தர்: மேட்டூர் அணை திறந்து 45 நாட்களுக்கு மேலாகியும் கடலுக்கு காவிரி நீர் சென்றது. கடைமடையை செல்லவில்லை. முக்கெம்பு மேலணையின் மதகுகள் உடைந்த நிலையில்
டெல்டா பாசனம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆழ்குழாய் மூலம் குறுவை நடவு செய்த நெற் பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் தண்ணீர் வாய்க்காலில் வராத காரணத்தால் கதிராக வெளியே
வராமல் பதராக வந்து கொண்டு இருக்கிறது. எனவே கரைக் காவலர்களை நியமித்து குறுவை நடவுப் பயிரைக் காப் பாற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.

இவ்வாறு விவசாயிகள் காலை 10 முதல் 12 மணி கூறிக் கொண்டு அலுவலகத்தில் விவசாயிகள் அமர்ந்து இருந்தனர். இந்த கருத்தை ஆர்டிஓ வந்த வுடன் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று காத்திருந்தனர். ஆனால் 12 மணி ஆகியும் ஆர்டிஓ சுரேஷ் அலுவல
கத்திற்கு வரவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் ஆர்டிஓவைகண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். தமிழக அரசு தான் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை என்றாலும், குறைகளை கேட்க கூட அதிகாரி வரவில்லை என்று தெரிவித்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த விவ சாயிகள் தாங்கள் வைத்திருந்த காய்ந்த நாற்றங்காலை வைத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கடைமடை வரை தண்ணீர் விடாத தமிழக அரசை கண்டிக்கிறோம். விவசாயிகளை வாழ விட வேண்டும். விவசாயிகளுக்கு தண்ணீர் விடாத தமிழக அரசை கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: