பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வைத்து மீம்ஸ் போடுவது தமிழத்தில் அவ்வப்போது டிரெண்டாகும். சமீபத்தில் சில நாட்களாக எந்த சர்ச்சையும் இன்றி அடக்கமாக எச்.ராஜா சமூக வலைத்தளங்களில் செயட்பட்டு வருகிறார்.
இந்நிலையில் திடீரென எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நல்ல செய்தி என ஆல் வீடியோ டவுன்லோடர் ஏவிடி என்ற ஒரு செயலியின் (ஆப்) விளம்பரத்தை வெளியிட்டிருந்தார். பொதுவாக இந்த செயலியை பயன்படுத்தியே பலர் மொபைல்களில் இருந்து பல வீடியோக்களை டவுன்லோடு செய்து வருகின்றனர். இந்த செயலி மூலம் அதிகளவில் பாலான படங்கள் மற்றும் வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையே எச்.ராஜா நல்ல செய்தி என இந்த செயலி விளம்பரத்தை பதிவிட்டிருந்தார். பொதுவாக யூடியூப் இல் இருந்து மற்ற செயலிகள் மூலம் வீடியோக்களை டவுன்லோடு செய்வதை கூக்குள் நிறுவனம் அனுமதிப்பதில்லை.
எச்.ராஜா இந்த செயலிக்கு விளம்பரம் செய்யும் வகையில் பதிவிட்டிருந்த ட்விட்டை அடுத்து நெட்டிசன்கள் பலரும் வகைதொகையில்லாமல் எச்.ராஜாவை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள் நிறுவனம் கூகுள் ப்ளே ஸ்டோர் பக்கத்தில் இந்து அந்த செயலியை நீக்கியிருக்கிறது. காரணம் அது ஒரு ”பைரசி” ஆப் ஆகும். இது தெரியாமல் அதற்கு விளம்பரம் செய்து வினையை தேடிக்கொண்டிருக்கிறார் எச்.ராஜா.

இதற்கிடையில் எச்.ராஜாவின் அட்மினுக்கு அறிவே இருக்காதா.. என்பதில் துவங்கி…பல்வேறு கோணங்களில் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட எச்.ராஜா தன்னுடைய விளம்பர ட்விட்டை தெலிட செய்து விட்டார். ஆனாலும் மக்கள் விடுவதாக இல்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.