கொச்சி:
ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளயிக்கல்லுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சபையின் வாட்டிகன் பிரதிநிதிக்கும், நாட்டிலுள்ள பிஷப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் அனுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை பிஷப்புகளும், குருக்களும் அனுப்பியுள்ள கடிதத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப்பை அந்த தகுதியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரத்தில் சகோதரிக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கேரளத்தின் குரவிலங்காடு மடத்தின் கன்னியாஸ்திரிகள் தெரிவித்தனர். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்துக்கு முன்பு நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். எர்ணாகுளத்தில் அவர்கள் நான்கு நாட்களாக நடத்திவரும் போராட்டம் நீடிக்கிறது. கிறிஸ்தவர் கூட்டமைப்பின் சார்பில் தர்ணாவும் சத்தியாக்கிரகமும் நடைபெற்று வருகிறது.

அரசுக்கு நிர்ப்பந்தம் இல்லை
ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளயிக்கல்லுக்கு எதிராக கன்னியாஸ்திரி அளித்துள்ள புகார் மீதான விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசுக்கு எவ்வித நிர்ப்பந்தமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.