திருப்பூர்,
அம்மாபாளையம் அருகே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் குழார் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அம்மாபாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தலிருந்து அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் வரையில் சுமார் 4 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருக்கிறது. அதுவும் சுமார் ஒராண்டாக இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தபோதிலும் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடைப்பை சரிசெய்ய எவ்விதநடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அதுவும் அருகிலுள்ள பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் இல்லாத நிலையில், எவ்வித அக்கறையும் இன்றி குடிநீர் வீணாகி வருவதை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் ஆவேசமாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு அலுவலர் முகமதுவிடம் கேட்டபோது; அவிநாசி சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாய் விஜயமங்கலத்திலிருந்து பல்லடம் வரை செல்லக்கூடிய குழாயாக உள்ளது. அதனால் அந்த பகுதி வழியாக செல்லக்கூடிய குழாயில் ஒரு இடத்தில் அடைப்பு ஏற்பட்டால் மற்றொரு இடத்தில் தண்ணீர் வெளியேறுகிறது. இதனை சரிசெய்ய அந்த வழியாக செல்லும் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினால் சுமார் 1700 கிராமங்களில் குடிநீர் விநியொகம் பாதிக்கப்படும். இதன்காரணமாக உடைப்பை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. இருப்பினும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.