நாமக்கல்,
திருச்செங்கோடு அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் சிதலமடைந்த நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்ல சமுத்திரம் ஒன்றியம் பள்ளிப்பட்டி கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட சமுதாய நலக்கூடம் போதிய பராமரிப்பு இன்றி புதர் மண்டி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களின் பல்வேறு குடும்ப விழாக்களுக்கு சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது இதனைப்பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, ஊராட்சிஒன்றிய நிர்வாகம் தலையிட்டு சிதலமடைந்த சமுதாய நலக்கூடத்தை இடித்து விட்டு புதிய சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.