சேலம்:
தங்கள் ஆட்சிக்கு யார் நிதி தந்து உதவிகரமாக இருப்பார்களோ அவர்களுக்கே அம்மாவின் அரசு துணை நிற்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சேலம் விமான நிலையத்தில் செவ் வாயன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட விடமாட்டோம். இதில் தமிழக
அரசு உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளது. சட்டரீதியாக நீதி மன்றத்தை அணுகுவோம்.
தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து பரப்பப்படும் குற்றச்சாட்டு கள் உண்மைக்கு புறம்பானவை. தற்போதைய ஆட்சி சிறப்பாக நடைபெறு கிறது. எந்த துறையிலும் தவறு நடப்ப தாக தனக்கு தெரியவரவில்லை. அமைச்சர் வீடுகளில் சிபிஐ விசார ணை மேற்கொண்டாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளி என தெரிவிக்க முடியும்.

பெட்ரோல், டீசல் விலை குறைப் பது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசு தற்போது உள்ள நிதிச் சுமையில் குறைப்பது சாத்தியமில்லை. எங்கள் ஆட்சிக்கு யார் நிதி உதவி செய்து உதவிகரமாக இருப்பார்களோ அவர்களுக்கு அம்மாவின் அரசு நிச்சயம் துணை நிற்கும். தமிழக அரசுக்கு எதிராக பாஜக செயல்படுவ தாக தம்பிதுரை கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.