ஈரோடு;
  ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்டாய கல்விச் சட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்காக, விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளேன். தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இதுவரை 102 கோடி ரூபாய் நிதி மட்டுமே மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.